பொது நிதியைப் பயன்படுத்துவதற்கு கோட்டாபயவுக்கு உரிமையுண்டு-அமைச்சரவைப் பேச்சாளர்

117 Views

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது நிதியைப் பயன்படுத்துவதற்கு உரிமையுள்ளவர் என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு நிதியளிப்பது யார் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,“இலங்கை ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் பிரகாரம் விசேட சலுகைகளை முன்னாள் ஜனாதிபதி மற்றும் பதவியில் இருக்கும் எந்தவொரு ஜனாதிபதிக்கும் அனுபவிக்கும் உரிமை உண்டு” என பந்துல குணவர்தன  தெரிவித்துள்ளார்.

Leave a Reply