408 Views
வவுனியாவில் இளைஞர்கள் போராட்டம்
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களை வீட்டுக்கு செல்லுமாறு தெரிவித்து இளைஞர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தனர்.
வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக கோட்டபாய ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறும் பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்தும் பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டம் இடம் பெற்றதுடன், போராட்டகாரர்கள் ஏ9 வீதியை மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணிநேரம் குறித்த போராட்டம் இடம்பெற்றதுடன், அரசுக்கு எதிராக கோசங்களும் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் வவுனியா பல்கலைக்கழக பெரும்பான்மை இன மாணவர்களும், சிங்கள இளைஞர்களும் கலந்து கொண்டனர்.