‘தெற்கு லெபனானில் இருந்து வெளியேறுங்கள்’ – ஹிஸ்புல்லாவுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

லெபனான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள லித்தானி ஆற்று பகுதியை ஒட்டி முகாமிட்டுள்ள படையினரை திரும்ப பெற வேண்டும் என ஹிஸ்புல்லாவை இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது. இல்லையென்றால் போர் நிறுத்த ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்படும் நிலை இருப்பதாக எச்சரித்துள்ளதாகவும் தகவல்.

அண்மைய காலமாக ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் என இரு தரப்பிலும் போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டு வருவதாக ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பர் 27-ம் திகதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் தான் ஞாயிற்றுக்கிழமை அன்று இஸ்ரேல் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.