வெனிசுலாவில் பூகோள அரசியல் தேர்தல் வன்முறை முடிவுக்கு வந்தது

வெனிசுலாவில் இடம்பெற்ற தேர்தல் வன்முறைகள் முடிவுக்கு வந்துள்ளதுடன், நிகொலஸ் மடுரோ மூன்றாவது தடவையாக அரச தலைவராக பதவியேற்றுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை (28) ஆம் நாள் இடம் பெற்ற தேர்தலில் மடுரோ 51விகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டபோ தும், அவரின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாத எதிர்கட்சியினர் நாடு முழு வதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் கொன்சலேஸ் 44 விகித வாக்குகளை பெற்றிருந்தார்.

கடந்த திங்கட்கிழமை(29) தொடக்கம் புதன்கிழமை(30) வரையிலும் இடம்பெற்ற வன்முறைகளில் 11 பேர் கொல்லப்பட்டதுடன், 750 இற்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப் பட்டிருந்தனர். அதன் பின்னர் தேர்தலில் வெற்றிபெற்ற அதிபருக்கு ஆதரவாக அவரின் கட்சிக்காரர்கள் நாடுமுழுவதும் ஆதரவுப்பேரணியை நடத்தி யிருந்தனர்.

தேர்தலை கண்காணிக்க அனைத்துலக கண்காணிப்பாளர்கள் வருகைதந்திருந்தபோதும், தேர்தல் முடிவுகளை அமெரிக்கா தலைமை யிலான நாடுகள் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளன. இந்த தேர்தல் முறைகேடாக நடந்துள்ளதாக அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் அந் தோனி பிளிங்டன் தெரிவித்திருந்தார்.

எனினும் தேர்தலில் வெற்றிபெற்ற மடுரோவுக்கு ரஸ்யா, சீனா, கியூபா உட்பட பல நாடுகள் தமது வாழ்த்துக்களைத் தெரி வித்துள்ளன. அதாவது இந்த தேர்தல் வெற்றி தொடர்பில் உலக நாடுகள் இரண்டு பிரிவாக பிரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் வெனிசுலா அதிக எண்ணைவளத்தை கொண்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு முதல் பதவியில் உள்ள மடுரோ அரசு மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. தற்போதைய தேர்தல் வன்முறைகளுக்கு பின்னால் அமெரிக்கா உள்ளதாகவும், அமெரிக் காவின் அதரவுகள் எதிர்க்கட்சிகளுக்கு உள்ளதாக வும் குறிப்பிடப்படுகின்றது.