ஹெயிட்டியில் தொடரும் ஆயுதக் குழுக்களின் வன்முறை காரணமாக இதுரையில் 700,000 மக்கள் உள்நாட்டியேயே இடம்பெயர்ந்துள்ளதாகவும், அவர்களில் அரைவாசிக்கு மேற் பட்டவர்கள் சிறுவர்கள் எனவும் இடம்பெயர்ந்தவர்களுக்கான அனைத்துலக அமைப்பு கடந்த புதன்கிழமை(2) தெரிவித்துள்ளது.
கடந்த ஜுன் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 22 விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 7 மாதங்களில் 110,000 மக்கள் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தகர்
களுக்கு சார்பான பல ஆயுதங் குழுக்கள் நாட்டின் பல பகுதி களை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதுடன், வன்முறைகளி லும் ஈடுபட்டு வருகின்றன. கடந்த பெப்ரவரி மாதம் இந்த குழுக்கள் சிறைச்சாலை மற்றும் அரச நிறுவனங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதை தொடர்ந்து அங்கு நிலமைகள் மோசமாகி வருகின்றன.
நாட்டின் பிரதமர் ஏரில் ஹென்றி பதவி விலகியதைத் தொடர்ந்தே இந்த வன்செயல்கள் அதிகரித்துள்ளன. தற்போது அங்கு இடைக்கால அரச தலைவர் சபை அமைக்கப்பட்டுள்ளதுடன், கென்யா தலமையில் ஐக்கிய நாடு கள் சபையின் பல நாடுகளை உள்ளடக்கிய படையினரும் அமைதி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கு இடம்பெற்ற வன்முறைகளில் இந்த வருடம் 3,600 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 48 விகிதமான மக்கள் உணவுப் பற்றாக்குறையையும் எதிர் கொண்டுள் ளனர்.



