பட்டதாரி பயிலுனர்களின் வாக்குறுதிகளை ஏமாற்றாமல் நிறைவேற்றவும்- இம்ரான் வலியுறுத்தல்

419 Views

பயிலுனர்களின் வாக்குறுதிகளை ஏமாற்றாமல் நிறைவேற்றவும்

பட்டதாரி பயிலுனர்களின் வாக்குறுதிகளை ஏமாற்றாமல் நிறைவேற்றவும் என  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ம் ஆண்டு பட்டதாரி பயிலுனர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு உடன் நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் வலியுறுத்தியுள்ளார்.

கிண்ணியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் “ஒரு வருடத்துக்கு பின்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படுவதாக கூறப்பட்ட போதிலும், மேலும் ஆறு மாதங்கள் நீடித்திருப்பது பட்டதாரிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். அவர்களுக்கான கொடுப்பனவு தற்போது 20 ஆயிரம் ரூபாவே வழங்கப்படுகிறது. இதனையும்  உரிய காலப்பகுதியில் சில செயலகங்களில் வழங்கப்படுவதில்லை. தற்போதைய நிலையில் நிரந்தர நியமனத்தை குறைந்தது மூன்று மாதங்களாவது நீடித்து வழங்க வேண்டும்” என்றார்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021

Leave a Reply