எரிபொருள் தட்டுப்பாடு-இந்தியாவிடமிருந்து 4 தவணையாக எரிபொருளை இலங்கை பெறவுள்ளதாக தகவல்

240 Views

4 தவணையாக எரிபொருளை இலங்கை பெறவுள்ளது

இலங்கையில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாக, இந்தியாவிடமிருந்து 4 தவணையாக எரிபொருளை ஒரு தவணைக்கு 40,000 டன் வீதம் இலங்கை அரசு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகச் சந்தையிலிருந்து மொத்தமாக எரிபொருளை சில தள்ளுபடிகளுடன் வாங்கும் நாடாக இந்தியா இருக்கிறது. இந்த நிலையில். இரு நாட்டு உறவு மேம்பாட்டையும் கருத்தில் கொண்டு, இணைந்து எரிபொருள் வாங்குவதற்கான முன்வடிவை இலங்கை இந்தியாவிடம் அளித்துள்ளது. அதாவது, உலக சந்தையிலிருந்து இந்தியா வாங்கும் அதே தள்ளுபடி சலுகைகளுடன் இலங்கைக்கும் சேர்த்து எரிபொருள் வாங்கும்படியான கோரிக்கை முன்வடிவு இது. இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்த யோசனையை அண்மைக்காலங்களில் தெரிவித்து வந்தார்.

தற்போது நான்கு தொகுப்புகளாக எரிபொருள் கொள்வனவை முன்னெடுக்க இலங்கை அரசு யோசனை தெரிவித்துள்ளது. அதன்படி, முதலாவதாக டீசல் கப்பல் வந்து சேரும். பின்னர் தேவையின் அடிப்படையில் பெட்ரோல் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே இலங்கை இந்தியாவிடமிருந்து 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்றுள்ளது.

Tamil News

Leave a Reply