இலங்கைக்கு எதிரான பயண கட்டுப்பாடுகளை தளர்த்தியது பிரான்ஸ்

105 Views

இலங்கைக்கு ‘அத்தியாவசியமான பயணங்களை மட்டும்’ மேற்கொள்ளுங்கள் என தமது நாட்டு பிரஜைகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்திருந்த பிரான்ஸ் அரசாங்கம் அதனைத் தளர்த்தியுள்ளதுடன் இலங்கை பயணத்தின் போது ‘எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்’ என ஆலோசனை வழங்கியுள்ளது.

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை மேலும் நீடிக்கப்படாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் அறிவித்திருந்த நிலையில் பிரெஞ்சு அரசாங்கத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சமீபத்திய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, பிரான்ஸ் அரசாங்கம் தனது குடிமக்களுக்கு இலங்கையில் பயணம் செய்யும் போது அதிக விழிப்புடன் இருக்குமாறு பரிந்துரைத்துள்ளதுடன் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகங்கள் சாதகமாக இருப்பதாகவும் உள்ளூர் பயண நிறுவனங்களுடன் பயணத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுமாறும் சுற்றுலாப் பயணிகளை பிரான்ஸ் ஆலோசனை வழங்கியுள்ளது .

Leave a Reply