இலங்கைக்கு பிரான்ஸ் 450,000 யூரோக்களை வழங்க ஒப்பந்தம்

இலங்கையின் எரிசக்தி கலவையில் இடைவிடாத புதுப்பிக்கத்தக்க சக்திகளின் பங்களிப்பை ஆதரிப்பதற்காக இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் Electricité de France (French Electric utility) ஆகியவற்றுடன் 450,000 யூரோக்கள் பெறுமதியான மானிய ஒப்பந்தத்தில் பிரென்ஸ் அபிவிருத்தி நிறுவனம் (AFD) கைச்சாத்திட்டுள்ளது.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் Jean-François Pactet முன்னிலையில் AFD நாட்டின் பணிப்பாளர் Reda Souirgi, இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இளங்ககோன் மற்றும் போக்குவரத்து அமைப்புகளுக்கான EDF நிலைய பொறியியல் பிரதிநிதிகளினால் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.