யாழ்.மாநகர முதல்வராக மீண்டும் முன்னாள் முதல்வர் ஆர்னோல்ட் தெரிவு

185 Views

யாழ். மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்தப் பிரகடனத்தைத் தாங்கிய 2315/62 ஆம் இலக்க விசேட வர்த்தமானி நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு வெளியாகியது.

யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதன் முதலாவது சமர்ப்பிப்பின் போது தோற்கடிக்கப்பட்டது. இதனை அடுத்து முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்ததார்.

இந்த நிலையில் அவரது வெற்றிடத்திற்கு 2012ஆம் ஆண்டு 22ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் 66 (எ) பிரிவின் கீழ், கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட தெரிவின் மூலம், முன்மொழியப்பட்ட படி இ. ஆர்னோல்ட் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார்.

Leave a Reply