காசாவில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இஸ்ரேல் காசா மீது போர் நடத்தி வருகிறது. காசா பகுதியில் இதுவரை 44,282 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சூழலில் எகிப்து அரசின் சமரசத்தின் பேரில் இஸ்ரேல் – காசா இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அமெரிக்க அரசு வட்டாரங்கள் கூறும்போது, “தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் வரும் ஜனவரியில் முடிவடைகிறது. அதற்குள் காசாவில் போர் நிறுத்தம் அமலாகும். இதுதொடர்பாக இஸ்ரேல் அரசு – காசா நிர்வாகம் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும்” என்று தெரிவித்துள்ளன.