புத்தளம் கற்பிட்டி பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை காணவில்லை

144 Views

a13e7905 ba6729b9 45c950fa d59ea99f புத்தளம் கற்பிட்டி பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை காணவில்லை

புத்தளம் – கற்பிட்டி பகுதியிலிருந்து கடந்த  9ம் திகதி  இயந்திரப் படகு ஒன்றில் மூன்று  மீனவர்கள்  மீன் பிடித் தொழிலுக்காக கடலுக்குச் சென்றுள்ளனர். 

இவ்வாறு மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரும் இதுவரை கரை திரும்பவில்லை என கற்பிட்டி காவல் நிலையத்திலும், கற்பிட்டி கடற்படை முகாமிலும் குறித்த  மீனவர்களின் குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவ்வாறு காணாமல் போன மீனவர்கள், கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியைச் சேர்ந்த எம்.எஸ்.முஹம்மட் அலிகான் (வயது 26), முஹம்மட் நபீல் (வயது 45) மற்றும் கற்பிட்டி மணல் தோட்டம் பகுதியைச் சேர்ந்த நிசங்க (வயது 21)  எனக் கூறப் படுகின்றது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 139

ilakku-weekly-epaper-139-july-18-2021

Leave a Reply