ஒரு வாரத்தில் வடக்கில் 5 சடலங்கள் கண்டெடுப்பு

341 Views

அடையாளம் தெரியாத 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன

கடந்த ஒரு வார காலத்திற்குள் வடக்கு கடற்கரை பிரதேசங்களில் அடையாளம் தெரியாத 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதனிடையே, சடலங்களைஅடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 2ம் திகதி யாழ். வடமராட்சி கிழக்கு, சுண்டிக்குளம் கடற்கரையில் பகுதியிலும்  கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். வெற்றிலைக்கேணி கடற்கரையிலும்  சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், யாழ். வடமராட்சி – மணற்காடு, வல்வெட்டித்துறை ஊரிக்காடு, யாழ். நெடுந்தீவு – ஒற்றைப்பனை கடற்பரப்புகளிலும் அடையாளம் காண முடியாத சடலங்கள் மீட்கப்பட்டன.

கரையொதுங்கிய 03 சடலங்கள் பருத்தித்துறை வைத்தியசாலையிலும், யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரு சடலமும் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சடலம், இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad  ஒரு வாரத்தில் வடக்கில் 5 சடலங்கள் கண்டெடுப்பு

Leave a Reply