அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க கூட்டமைப்பு தீர்மானம் – செல்வம் அடைக்கலநாதன்

74 Views

அவசரகால சட்டத்துக்கு எதிராகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும் என அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவசரகால சட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று(27) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக வழியிலான போராட்டங்களை ஒடுக்கக்கூடாது எனவும், அவ்வாறு ஒடுக்க முற்பட்டதால்தான் இந்நாட்டில் ஆயுதப்போராட்டம்கூட ஏற்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply