தமிழரசு கட்சியின் செயல்குழு இன்று கொழும்பில் கூடுகிறது! சுமந்திரன் பங்கேற்பாரா?

இலங்கை தமிழரசு கட்சியின் செயல்குழு இன்று புதன்கிழமை கூடுகின்றது. கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த செயல்குழுவில் கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு, தமிழரசு கட்சியின் தலைமை பதவிக்கான தேர்தல், திருகோணமலை கிளையின் நிர்வாக தெரிவில் இடம் பெற்றவை எனக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பிலும் பேசப்படவுள்ளன.

இதேவேளை, இன்றைய தினம் நடைபெறவுள்ள கூட்டத்தில் தமிழரசு கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தல் தொடர்பில் கடும்வாதப் பிரதிவாதங்கள் நிகழக்கூடும் என்று செயல்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இதேநேரம், இன்றைய கூட்டத்தில் தமிழரசு கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடுபவர்களில் ஒருவரான ம.ஆ.சுமந்திரன் பங்கேற்பாரா என்பது தெரியவரவில்லை. வெளிநாடு சென்றுள்ள சுமந்திரன் நேற்றுப் பகல்வரை நாடு திரும்பியிருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.