பிரச்சினைகளுக்கு தீர்வினைப்பெற்றுக்கொடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை

67 Views

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப்பெற்றுக்கொடுக்க அனைத்து அமைப்புகளும் ஆதரவு வழங்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் விவசாய அமைப்புகள் இணைந்து மட்டு.ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்ட நிலையிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் அது பாரிய ஆபத்தினை இந்த நாட்டில் ஏற்படுத்தும் எனவும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி அதில் அரசியல் செய்வதற்கும் சிலர் முற்படுதாகவும் இதன்போது அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply