மலேசியா பிரதமரின் பதிவை நீக்கியது முகநூல்?

கடந்த புதன்கிழமை(31) அதி காலை ஈரானில் வைத்து இஸ்ரேலினால் கொல்லப்பட்ட ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் கனியாவின் படுகொலைக்கு பதிலடியாக ஈரானும், அதற்கு முதல் நாள் லெபனானின் தலைநகரில் வைத்து இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லாவின் கட்டளை அதிகாரியின் இழப்புக்கு பதிலடியாக ஹிஸ்புல்லாக்களும் இஸ்ரேலை தாக்க தயாராகி வரும் நிலையில் இஸ்ரேலை தாக்க வேண்டாம் என அமெரிக்கா ஈரான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கட்டார் நாட்டின் வெளிவிவகார அமைச்சரை தொடர்பு கொண்ட பிளிங்கன் தமது செய்தியை ஈரான் மற்றும் ஹிஸ்புல் லாக்களிடம் தெரிவிக்குமாறு தெரி வித்துள்ளதாக அமெரிக்கா வைத் தளமாகக் கொண்ட சி.என்.என் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த கோரிக்கையை தாம் ஈரானுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் தெரிவிப் பதாக கட்டார் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு மற்றும் அரச அதிகாரிகளை பயணங்களைத் தவிர்க்குமாறு இஸ்ரேலின் உள்ளக பாதுகாப்பு பிரிவு கேட்டு ள்ளது. மிக முக்கிய பயணங்களை தமது அனுமதியுடன் மேற் கொள்ளுமாறு அவை மேலும் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலுக்கான விமான சேவைகளை பல நாடுகள் மட்டுப்படுத்தியுள்ளதுடன், இஸ் ரேலுக்கான பயணத்தை தவிர்க்குமாறு பிரான்ஸ் தமது மக்களைக் கேட்டுள்ளது.

அதேசயம், தமது இறைமையை பாது காக்கும் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் 51 ஆவது சரத்தின் அடிப்படையில் தற்பாதுகாப்பு தாக்குதலை தாம் நடத்தப்போவதாக ஈரான் ஐ.நாவுக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுத்துள்ளது.