இலங்கை ஜனாதிபதி செயலணி பதவிக்காலம் நீடிப்பு

இலங்கையில் ஒரே நாடு ஒரே சட்ட ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில், கடந்த 27ஆம் திகதி ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதன் பதவிக் காலத்தை மேலும் மூன்று வாரங்கள் நீடித்து ஜனாதிபதி வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இத்த செயலணியின் இறுதி அறிக்கை 10 நாட்களுக்குள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இந்த செயலணியிலிருந்து மூன்று முஸ்லிம் உறுப்பினர்கள் ராஜிநாமா செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Tamil News