சுதந்திர தின நிகழ்வில் மயக்கம்: வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை இடம்பெற்ற இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பலர் மயக்கமடைந்தமையால் பரபரப்பு ஏற்பட்டது.
இலங்கையின் 74 வது சுதந்திரதின நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04) காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து நிகழ்வில் அணிநடையில் கலந்து கொள்ளவந்திருந்த மாணவர்கள் மற்றும் ஊர்காவற்படையினர் உட்பட இருபதுக்கும் மேற்பட்டோர் திடீர் என மயக்கமடைந்து விழுந்தனர். இதனால் குறித்த நிகழ்வில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.
அதிக நேரம் வெயிலில் நிற்க வைக்கப்பட்டிருந்தமையால் அவர்கள் மயக்கமடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.