தாய்லாந்தின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமரின் மகள் தெரிவு

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சின்வட்டிராவின் மகள் பேடொங்டர்ன் சின்வட்டிரா அந்த நாட்டின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

37 வயதான இவர் தாய்லாந்தின் இளம் பிரதமர் என்பதுடன்  இரண்டாவது பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள்பிரதமரை அரசமைப்பு நீதிமன்றம் பதவி நீக்கம் செய்துள்ளதை தொடர்ந்தே இவர் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும் பியுதாய் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.