முன்னாள் போராளியை 3 நாள் தடுத்துவைத்து விசாரிக்க உத்தரவு

18 முன்னாள் போராளியை 3 நாள் தடுத்துவைத்து விசாரிக்க உத்தரவுபயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளி செல்வநாயகம் அரவிந்தனை (ஆனந்தவர்மன்) மூன்று நாள்கள் தடுத்து வைத்து விசாரிக்கப் பாதுகாப்பு அமைச்சால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு நேற்றுமுன் தினம் வாக்குமூலம் வழங்கச் சென்றிருந்த வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசிக்கும் போராளிகள் நலன்புரிச் சங்கத் தலைவர் செல்வநாயகம் அரவிந்தன் (ஆனந்தவர்மன்) பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும், அவரைப் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினர் மூன்று நாள்கள் தடுத்து வைத்து விசாரிக்கப் பாதுகாப்பு அமைச்சால் நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்யும் வகையில் முகநூலில் அரவிந்தன் பதிவிட்டிருந்தார் என்று குற்றஞ்சாட்டியே அவரைப் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.