பனிப்போர் காலத்தில் மேற்குலகத்திற்கு ஆதரவான பிரச்சாரங்களை மேற்கொள்ள
வென ஆரம்பிக்கப்பட்ட சுதந்திர வானொலி Radio Free Europe/Radio Liberty (RFE/RL) என்ற வானொலியின் நடவடிக்கைகளை தக்கவைப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அவசர நிதியாக 5.5 மில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளது.
1950 ஆம் ஆண்டு ரஸ்யாவுக் கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட பனிப்பொர் காலத்தில் அமெரிக்காவின் புல னாய்வு அமைப்பான சி.ஐ.ஏயின் உதவியுடன் மேற்குலகத்தின் பிரச்
சார நடவடிக்கைகளுக்காக இந்த வானொலி உருவாக்கப்பட்டிருந் தது. அதன் பின்னர் அதனை அமெரிக்காவின் அனைத்துலக ஊடகங்களுக்கான அமெரிக்காவின் அமைப்பு US Agency for Global Media (USAGM) என்ற அமைப்பு வழிநடத்தியிருந்தது.
ஆனால் தற்போது பதவியேற்றுள்ள அமெரிக்க அரச தலைவர் டொனால்ட் ட்றம் பின் நிதி கட்டுப்பாடு தொடர்பான கொள்கைகள் காரணமாக இந்த வானொலிக்கான நிதியை அமெரிக்க அரசு நிறுத்தியுள்ளதை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் அதற்கான நிதியை வழங்கியுள்ளது.
தற்போதைய உலக ஒழுங்கில் ஊடகத் துறை மிக முக்கியமானது எமது கருத்துக்களை ரஸ்யா, ஈரான், பெலாறூஸ், மற்றும் ஆசிய ஆபிரிக்க நாடுகளில் கொண்டு செல்வதற்கு இந்த ஊடகம் முக்கியமானது. எனவே தான் ஐரோப்பிய ஒன்றியம் அவசரகால நிதியான 5.5 மில்லியன் யூரோக்களை வழங்கியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கைகளுக்கான பேச்சாளர் கஜா கலாஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நிதி உதவியை ஐரோப்பிய ஒன்றியம் முழுமையாக ஈடுசெய்ய முடியாது என்றாலும் ஊடகத்துறை மிகவும் முக்கியமானது என்பதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகள் நிதி உதவிகளை வழங்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நிதி நிறுத்தத்தை தொடர்ந்து இந்த வானொலி பல ஊடகவியலாளர்களை பணியில் இருந்து நிறுத்தியதுடன், நிகழ்ச்சிகளையும் குறைத்திருந் தது.