யூரோவிஷனை புறக்கணித்த ஐரோப்பிய நாடுகள்!

அடுத்த யூரோவிஷன் பாடல் போட்டியில் இஸ்ரேல் பங்கேற்க அனுமதிக்கப்பட்டதை அடுத்து, அதனை புறக்கணிப்பதாக ஸ்பெயின், அயர்லாந்து, ஸ்லோ வேனியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், வாக்கு மோசடி மற்றும் காசாவில் நடந்த போர் தொடர்பாக இஸ் ரேலைத் தடை செய்யுமாறு பல ஒளிபரப்பாளர்கள் போட்டி ஏற் பாட்டாளர்களை ஐரோப்பிய ஒளிபரப்பு ஒன்றியம் (EBU) வலியுறுத்தி யிருந்தது.
அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய போர் நிறுத்தம், மோதல்களை இடை நிறுத்தி, மனிதாபிமான உதவிகளை அந்த பகுதிக்குள் அனுமதிக்கும் நோக்கம் கொண்டது, ஆனால் அது நடைமுறைப்படுத்தப்பட்டதில் இருந்து இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. இதுவரையில் 366 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
EBU கடுமையான வாக்களிப்பு விதிகளை மேற்கொண்ட பின்னர் வியாழக்கிழமை(4) முடிவை அறிவித்துள்ளது. இஸ்ரேலிய போட்டி யாளரை ஊக்குவிக்க 2025 போட்டி கையாளப் பட்டதாக பல ஐரோப்பிய ஒளிபரப்பாளர்கள் கூறியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மனிதநேயம், பத்திரிகை சுதந்திரம் போன்ற உலகளாவிய விதிகளின் மீறல் மேலும் யூரோவிஷன் பாடல் போட்டியின் முந்தைய பதிப்பின் போது ஏற்பட்ட அரசியல் தலையீடு, எங்களுக்கு ஒரு வரைமுறையை விதித்திருந்தது என நெதர்லாந்து தெரிவித்துள்ளது.
காசாவில் ஏற்பட்ட பயங்கரமான உயிர் இழப்பு மனிதாபிமான நெருக்கடி மற்றும் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான இஸ்ரேலின் அடக்குமுறை ஆகியவை அதன் விலகலுக்கும் நிகழ்வை ஒளிபரப்ப வேண்டாம் என்ற முடிவுக்கும் காரணங்கள் என அயர்லாந்து தெரி வித்துள்ளது. காசாவில் பாலஸ்தீனியர்களின் இனப்படுகொலைக்கு காரணமான ஒரு நாட்டின் பிரதிநிதியுடன் நாங்கள் ஒரே மேடையில் நிற்க முடியாது” என ஸ்லோவேனியா தெரிவித்துள் ளது.