ஐரோப்பா உக்ரைனை விட ரஸ்யாவுக்கு வழங்கும் நிதி அதிகம் -ட்ரம்ப்

 ஐரோப்பா ரஸ்யாவிடம் இருந்து எரிபொருட்களை கொள் வனவவு செய்யும் பணம், அது உக்ரைனுக்கு வழங்கும் நிதியை விட மிகவும் அதிகமானது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் காங்கிரஸ் சபையில் பேசும் போது தெரிவித்திருந்தார்.
ஆனால் ட்ரம்ப் நிதி தொடர்பான புள்ளிவிபரங்கள் தெரியா மல் பேசுவதாக அப்போது எல்லோ
ரும் கருதியிருந்தாலும், கடந்த வருடம் உக்கிரைனுக்கு ஐரோப் பாவால் வழங்கப்பட்ட நிதி 20.17 பில்லியன் டொலர்கள், அதே சமயம் ரஸ்யாவிடம் இருந்து ஐரோப்பா கொள்வனவு செய்த எரிபொருட்களின் அளவு 23.6 பில்லியன் டொலர்கள் என கடந்த வியாழக்கிழமை(27) வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த உதவியில் படைத் துறை உதவிகள் உள்ளடக்கப்படாது விட்டாலும், ட்ரம்ப்பின் கணக்கு சரியாக உள்ளதாகவே கருதப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டு போர் ஆரம்பமாகிய பின்னர் உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 194 பில்லியன் டொலர்கள் பெறுமதியான படைத்துறை மற்றும் இதர செலவுகளுக்கான உதவிகளை வழங்கியுள்ளது.
ரஸ்யாவில் இருந்து எரிபொருட்களை கொள்வனவு செய்வதை 2027 ஆம் ஆண்டு முற்றாக நிறுத்தப்போவதாக ஐரோப்பிய ஒன்றி யம் தெரிவித்துள்ளபோதும், கடந்த வருடம் அது ரஸ்யாவிடம் இருந்து கொள்வனவு செய்த எரிபொருட்களின் அளவு 18 விகிதத்தால் அதிகரித்துள்ளது.
ஐரோப்பா தொடர்ந்து ரஸ்யாவிடம் இருந்து எரிபொருட்களை கொள்வனவு செய்வது தமக்கு அதிர்ச்சியழிப்பதாக உக்ரைன் அதிபரின் ஆலோசகர் வலடிள்லக் விளசியுக் கடந்த ஜனவரி மாதம் தெரிவித்ததுடன், உக்ரைன் ஊடாக ஐரோப்பாவுக்கு ரஸ்யாவில் இருந்த செல்லும் எரிபொருள் விநியோகத்தையும் உக்ரைன் நிறுத்தியிருந்தது.
போர் ஆரம்பமாவதற்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியம் ரஸ்யாவிடம் இருந்து 142பில்லியன் கனமீற்றர் அளவு எரிபொருட் களை கொள்வனவு செய்திருந்தது. ஆனால் அதன் கொள்வனவு கடந்த ஆண்டு 31 பில்லியன் கனமீற்றராக குறைந்துள்ளது. ரஸ்யாவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்லும் நோட் ஸ்ர்pம் 1 மற்றும் இரண்டு உட்பட நான்கு எரி பொருட் குழாய்களை மேற்குலக நாடுகளின் உதவிகளுடன் உக்ரைன் குண்டு வைத்து தகர்த்திருந்தது. இந்த குழாய்களின் ஊடாகவே 110 பில்லியன் கனமீற்றர் எரிவாயுக்கள் ஐரோப் பாவுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது.