பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் உக்ரைனுக்கு சென்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதமர்கள்

381 Views

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதமர்கள்

உக்ரைனுக்கு சென்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரதமர்கள்

பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதென ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்திருந்த நிலையிலும்  உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக போலாந்திலிருந்து உக்ரைன் தலைநகர் கீயஃபிற்கு போலாந்து, ஸ்லோவேனியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளின் பிரதமர்கள்  தொடருந்தில் பயணம் மேற்கொண்டு அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியை சந்தித்துள்ளனர்.

கீயஃபில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று நாட்டு தலைவர்களும்  உக்ரைனின் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இந்நிலையில், சென் குடியரசின் பிரதமர், ‘உக்ரைன் மக்கள் தங்களின் விடுதலைக்காக போராடுகின்றனர்’ என தெரிவித்துள்ளார்.

அதேபோல பிரதமர்களின் வருகை உக்ரைனுக்கு வழங்கப்படும் வலுவான ஒரு ஆதரவு என்று ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு நடந்து கொண்டிருந்தபோதே உக்ரைன்  தலைநகர்  மீது ரஷ்ய படைகள் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்ததாக தகவல்கள்  வெளியாகியுள்ளன.

Leave a Reply