இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவை நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சில் சந்தித்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
தனது பதவிக்காலத்தில் இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய உறவுகளை வலுப்படுத்துவதற்கு தூதுவர் கார்மென் மொரேனோ வழங்கிய பங்களிப்புக்கு பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ நன்றியைத் தெரிவித்துள்ளார்.
தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து இலங்கையிலிருந்து புறப்படவுள்ள நிலையில் தூதுவர் கார்மென் மொரேனோ இந்த சந்திப்பினை ஏற்படுத்தியிருந்தார்.



