மீன் பிடியில் தடைசெய்யப்பட்ட சட்டத்தை அமுல்ப்படுத்து-முல்லைத்தீவில் சுவரொட்டிகள்

149 Views

மீன் பிடியில் தடைசெய்யப்பட்ட சட்டத்தை

“மீன் பிடியில் தடைசெய்யப்பட்ட சட்டத்தை உடனடியாக அமுல்படுத்து” என்ற தலைப்பில் முல்லைத்தீவு நகரின் பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டிகள், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால்  ஒட்டப்பட்டுள்ளன.

அதில்,

1996 இல.2 சட்டத்தின் படி, தற்போது இருக்கும் சட்ட திட்டங்களை நடைமுறைபடுத்த ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்போம்!- மீனவ கொள்கை ஒன்றை வகுத்து அதை நடைமுறைபடுத்தி நீரியல் வனங்களை பாதுகாப்போம்! எனவும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் லைட்கோஸ் லைலா – சுருக்குவலை டைனமைட் பயன்படுத்தி மீன்பிடித்தல், தங்கூஸிவலை – இழுவை மடி வலை மற்றும் சட்டத்தின்படி பயன்படுத்தாத கோஸ் வலை உள்ளடங்களாக மீனவ கட்டளைச் சட்டங்களில் தடைக்குட்படுத்தப்பட்ட மற்றும் ஒழுங்குபடுத்தலுக்கு உள்ளான மீன்பிடி முறைகள் மீனவ மற்றும் இயற்கை வளங்களுக்கு அழிவை ஏற்படுத்தக் கூடியது என்பது உங்களுக்கு தெரியுமா?

இருப்பினும் நிறைவேற்றப்பட்ட சட்டங்களை ஏனும் நடைமுறைபடுத்துவதில்லை. என்பது உமக்கு தெரியுமா? என குறிப்பிடப்பட்டுள்ளது.

ilakku Weekly Epaper 153 october 24 2021 Ad மீன் பிடியில் தடைசெய்யப்பட்ட சட்டத்தை அமுல்ப்படுத்து-முல்லைத்தீவில் சுவரொட்டிகள்

Leave a Reply