மட்டக்களப்பில் உணர்வுப்பூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!

இனஅழிப்பு நாளான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18) திங்கட்கிழமை  முன்னெடுக்கப்பட்டன.

மறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை வாகரை புச்சாங்கேணியில் நடைபெற்றது. மறத்தமிழர் கட்சியின் வாகரை கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து முள்ளிவாய்க்காலை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் படுகொலையினை நினைவுகூரும் வகையில் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் மறத்தமிழர் கட்சியின் இணைப்பாளர் ஆதம்குணா உட்பட பலர் கலந்துகொண்டனர்.