இலங்கையிலிருந்து சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட சக்சுரின் யானை நேற்று தாய்லாந்தை சென்றடைந்துள்ளது.
ஐந்து மணிநேர விமானபயணத்தின் பின்னர் யானை தாய்லாந்தின் சியாங்மாய் நகரின் விமானநிலையத்தை சென்றடைந்தது.
தாய்லாந்தின் இயற்கைவள சூழல் விவகார அமைச்சர் அதிகாரிகள் மிருகவைத்தியர்கள் வரவேற்றனர்.
லம்பாங் மருத்துவமனையின் வைத்தியர்கள் யாiனையை மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் யானை 30 நாள் தனிமைப்படுத்தலிற்கா யானை காப்பகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.
விமானநிலையத்தில் யானையை பார்ப்பதற்காக பெருமளவு சுற்றுலாப்பயணிகளும் பொதுமக்களும் திரண்டிருந்தனர்.
யானை பாதுகாப்பாக வருவதற்கான தார்மீக ஆதரவை வழங்குவதற்காக தான் வந்ததாக சுற்றுலாப்பயணியொருவர் தெரிவித்தார்,