ரஷ்யா சென்ற இலங்கையர்களை இராணுவத்தில் இணைக்க முயற்சி – வெளிநாட்டு வேலைவாய்ப்பில் மோசடி

3 5 8 ரஷ்யா சென்ற இலங்கையர்களை இராணுவத்தில் இணைக்க முயற்சி - வெளிநாட்டு வேலைவாய்ப்பில் மோசடிவேலை வாய்ப்புகளுக்காக ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட இலங்கையர்கள் சிலரை இராணுவத்தில் இணைக்ளும் முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவில் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன என்று கூறி நுகேகொடையில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் 17 இலங்கையர்களை அந்த நாட்டுக்கு அனுப்பியுள்ளது.

என்றாலும், இங்கு என்ன வேலை வாய்ப்புகள் உள்ளன எனத்தெளிவான பதில்கள் எதனையும் அளிக்காதே இவர்கள் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு ரஷ்யா சென்ற இலங்கையர்களை அந்நாட்டு இராணுவத்தில் பலவந்தமாக இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

என்றாலும், மோசடியாளர்களிடம் இருந்து தப்பிய இலங்கையர்கள் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர். சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கான தகவல்களை பாதுகாப்பு தரப்பிடம் வழங்க தாயகம் திரும்பிய இலங்கையர்கள் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இலங்கையில் மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகள் இருப்பதாக போலிதகவல்களை வழங்கி மோசடியான முறையில் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. அண்மையில், தாய்லாந்தில் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன என்று கூறி அனுப்பப்பட்ட இலங்கையர்கள் மியான்மரில் உள்ள தீவிரவாத குழுவிடம் சிக்கிய சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

இவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுவரும் பின்புலத்தில் மோசடியான முறையில் இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பு வியாபாரம் சூடு பிடித்துள்ளது. அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை கண்டறிந்து அவற்றின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்துள்ளன.