இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளை விசேடமாக மாற்றுவதற்கு பொருளாதார ஒருங்கிணைப்பு அவசியம் – மிலிந்த மொராகொட

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் தற்போது காணப்படும் உறவுகளை விசேடமானதாக  மாற்றுவதற்கு பொருளாதார ஒருங்கிணைப்பு அவசியமானது என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இராணுவ கல்லூரியில் இந்திய இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்தியாவிற்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உறவுகள் வரை தற்போதைய விசேடமான உறவுகள் வரை சுட்டிக்காட்டியுள்ள மிலிந்த மொராகொட இருநாடுகளிற்கும் இடையிலான உறவுகளில் மூலோபாய முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை இந்தியாவிற்கு இடையிலான உயிர்துடிப்பான உறவு குறித்து மேலும் விபரித்துள்ள மிலிந்தமொராகொட இலங்கையின் நெருக்கடியான காலகட்டத்தில் 4 மில்லியன் டொலர்உதவியை வழங்கியதன் மூலம் இந்தியா ஆற்றிய முக்கிய பங்களிப்பை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரு நாடுகளிற்கும் இடையிலான வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து சுட்டிக்காட்டியுள்ள மிலிந்த மொரகொட இந்தியா தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தினருக்கு வழங்கும் பயிற்சிகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.