கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் இந்திய நிறுவனத்திற்கு விற்பனை!

491 Views

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையின் 100% இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் செயற்படுத்தப்படும் என தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்த அரசாங்கம் தற்போது கொரோனா ஊரடங்கை சாதகமாக பயன்படுத்தி கிழக்கு முனையத்தின் முழு நிர்வாகத்தையும் 49% பகுதியையும் இந்திய நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார். 

“கொழும்பு துறைமுக கிழக்கு முனை குறித்து தேர்தலுக்கு முன் பாரிய எதிர்ப்பு வெளியிட்டனர். ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனார் இந்த அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது.

ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டையில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து எக்காரணம் கொண்டும் கிழக்கு முனையம் இந்தியாவிற்கு விற்கப்படாது என வாக்குறுதி அளித்தார்.

ஆனால் அதானி போட் என்ட் ஸ்பெசல் இக்கொனமிக் சோன் (அதானி துறைமுக மற்றும் சிறப்பு பொருளாதார வலயம்) என்ற இந்திய நிறுவனத்திற்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் 49% பகுதியை விற்பனை செய்ய இணங்கியுள்ளனர். அதுமாத்திரமன்றி அதன் முழு நிர்வாகத்தையும் குறித்த நிறுவனத்திற்கு வழங்க இணங்கியுள்ளதாக சர்வதேச பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

ஊரடங்கு சட்டத்தில் பயன்பெற்று மக்களை ஏமாற்றி இவ்வாறு வாக்குறுதிகளை மீறி இந்த அரசாங்கம் செயற்படுகிறது. மக்களுக்கு ஏன் உண்மையை கூற அரசாங்கம் மறுக்கிறது?” என ஹர்ச டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply