பாகிஸ்தான் முழுவதும் நிலநடுக்கம்!

பாகிஸ்தான் முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 5.6 அளவில் 73 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது, மேலும் ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் மையம் கொண்டிருந்தது.

இன்று மாலை 6:10 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. தலைநகர் இஸ்லாமாபாத், சுவத், பெஷாவர் மற்றும் அபோதாபாத் உள்ளிட்ட கைபர் பக்துன்க்வாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

ஆரம்ப செய்திகளின்படி, நிலநடுக்கத்தால் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், மக்கள்  அச்சமடந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.