சீன அரசாங்கத்தினால் 500 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
அரிசியை ஏற்றிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
நன்கொடையாகக் கிடைத்துள்ள அரிசியை நாட்டில் உணவுத் தேவையுள்ள பிள்ளைகளுக்கு பகிர்ந்தளிக்கவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகத்தின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தவிர மேலும் 500 மெட்ரிக் தொன் அரிசியை ஏற்றிய மற்றுமொரு கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையவுள்ளது.
அதனுடன் சேர்த்து சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு இதுவரை 6000 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.