சீர்குலைந்துள்ள சுகாதாரத்துறை – கோட்டா அரசுக்கு எதிராக யாழில் வைத்தியர்கள் போராட்டம்

127 Views

யாழில் வைத்தியர்கள் போராட்டம்

யாழில் வைத்தியர்கள் போராட்டம்

கோட்டா அரசின் மோசமான நிதி நிர்வாகத்தின் காரணமாக சுகாதாரத துறை சீர்குலைந்துள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் வைத்தியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (08) காலை 8 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்பகுதியில் ஒன்றுகூடிய வைத்தியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இக் கவனயீர்ப்பு போராட்டத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்த்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

WhatsApp Image 2022 04 08 at 9.32.39 AM 1 சீர்குலைந்துள்ள சுகாதாரத்துறை - கோட்டா அரசுக்கு எதிராக யாழில் வைத்தியர்கள் போராட்டம்

இதன்போது, அத்தியாவசிய மருந்துகள் இல்லை சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது, இலவச சுகாதாரம் இல்லாது ஒழிக்கப்படுகின்றது, இலவச மருத்துவம் ஆபத்தில் உள்ளது, மருத்துவம் மக்களின் அடிப்படை உரிமை, மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம், சுகாதார வசதிகளை இல்லாதொழிக்க வேண்டாம் போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைத்தியர்களால் தாங்கி பிடிக்கப்பட்டது.

WhatsApp Image 2022 04 08 at 9.32.38 AM சீர்குலைந்துள்ள சுகாதாரத்துறை - கோட்டா அரசுக்கு எதிராக யாழில் வைத்தியர்கள் போராட்டம்

அரசின் மோசமான நிதி நிர்வாகம் காரணமாக அத்தியாவசிய மருந்துகள் இல்லாமல் சுகாதார கட்டமைப்பு சீரழிந்து வருகின்றது என்றும் மக்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ளன என தெரிவித்தும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசுக்கு எதிராக இன்று போராட்டத்தில் ஈடுபட்டது.

Leave a Reply