பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் குடும்பத்தினரை நான்காண்டு காலம் சிறைவைத்தற்காக தாராளவாத தேசிய கூட்டணி தலைமையிலான அவுஸ்திரேலிய அரசாங்கம் 30 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை செலவழித்திருக்கிறது.
கடந்த 2012ல் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 யில் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் அவுஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர். தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு அவுஸ்திரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தன.
அவுஸ்திரேலியாவின் பிலோலா நகரில் வசித்து வந்த அவர்களின் விசா, கடந்த மார்ச் 2018ல் காலாவதியாகியதாக கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதையடுத்து அவர்களின் விடுதலை தொடர்பில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது அவர்கள் அவுஸ்திரேலியாவில் வாழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.