ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் திருப்தியில்லை – கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

499 Views

ஆணைக்குழுவின் செயற்பாடுகளில்

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு  பயணம் செய்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் திருப்தியில்லையென கிளிநொச்சியில் போராட்டத்தைத் தொடரும்  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தகவல்களை சேகரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு இன்று கிளிநொச்சி மாவட்டத்திற்கு பயணம் செய்திருந்தது.

இந்நிலையில், ஏற்கனவே அமைக்கப்பட்ட ஆணைக்கழுக்கள், காணாமல்  ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினால் எவ்வித தீர்வும் எட்டப்படாத நிலையில், இந்த ஆணைக்கழுவும் தமக்கு எத் தீர்வையும் வழங்காது என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது சங்க தலைவில் குாகிலவாணி  தெரிவிக்கையில்,

இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். நாங்கள் இன்று பதினொரு வருடமாக ஜனாதிபதி ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழுக்கள் உள்ளிட்டவற்றை சந்தித்து முறைப்பாடுகளை செய்துள்ளோம்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு ஐந்து பேரினது தகவல்களை ஒப்படைத்தோம். அந்த ஐந்து பேரினது தகவல்களைக்கூட பெற்றுத்தரவில்லை. அவர்களால் தரவும் முடியவில்லை.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு சென்று மாவட்டச் செயலகத்தில் தங்களிற்கு ஏற்றவர்களைக்கொண்டு தமக்கு சாதகமாக ஜெனிவாவில் விடயங்களை சமர்ப்பிப்பதற்காக, காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என தமக்கு ஏற்றவர்களை அழைத்து பொய்யான வாக்குமூலங்களை எடுத்துள்ளார்கள்.

இன்று எத்தனையோ ஆணைக்குழுக்களிடம் பதி்ந்தும் எமக்கு தகவல் ஏதும் கிடைக்கவில்லை. அந்த வகையில் நாங்கள் இன்று கிளிநொச்சிக்கு பயணம் செய்துள்ள ஜனாதிபதி ஆணைக்கழு ஆலுவலகத்திடம் செல்லவில்லை” என்றார்.

ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் திருப்தியில்லை - கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

Leave a Reply