பாடசாலைகளின் திறப்பை ஒப்படைக்குமாறு திலீபன் எம் பி கூறுவதற்கு அதிகாரமில்லை- இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு

147 Views

பாடசாலைகளின் திறப்பை ஒப்படைக்குமாறு

புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் பாடசாலையின் அனைத்து திறப்புகளையும் வலயக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினருக்கு எந்த அதிகாரமும் இல்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளை தலைவர் நேசராஜா தெரிவித்துள்ளார். 

புறக்கணிக்கப்பட்ட பாடசாலைகளின் திறப்பை ஒப்படைக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரித்துள்ள நிலையில் குறித்த கருத்து தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அதிபர், ஆசிரியர்கள் தற்போது பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது தொழிற்சங்க போராட்டம். இந்நிலையில் அதிபர்களிடம் திறப்புகளை ஒப்படைக்குமாறு எவரும் கேட்க முடியாது. அவ்வாறான ஒரு தேவை இருப்பின் மாகாண கல்வி திணைக்களத்தினூடாக அறிவுறுத்தல் அவர் வழங்க வேண்டும்.

வெறுமனே ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கட்டளையிட முடியாது. எனவே பாராளுமன்ற உறுப்பினருக்கு திறப்பை ஒப்படைக்க கூற எந்த அதிகாரமும் இல்லை எனவும் தெரிவித்தார்.

ilakku Weekly Epaper 152 october 17 2021 Ad பாடசாலைகளின் திறப்பை ஒப்படைக்குமாறு திலீபன் எம் பி கூறுவதற்கு அதிகாரமில்லை- இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு

Leave a Reply