கிரீன்லாந்தில் பிறப்பு விகித த்தை கட்டுப்படுத்தும் நோக் கில் கட்டாயப்படுத்தப்பட்ட கருத் தடை பிரச்சாரத்திற்காக டேனிஷ் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் மன்னிப்பு கோரியுள்ளார். சர்ச் சைக்குரிய இந்த திட்டத்தில் ஆயிரக்கணக்கான இளம் கிரீன் லாந்து பெண்கள் மற்றும் சிறுமி களுக்கு அவர்களின் அறிவு அல்லது ஒப்புதல் இல்லாமல் கருப்பையக சாதனங்கள் (IUDs) பொருத்தப் பட்டுள்ளன.
இந்த நடைமுறை முக்கிய மாக 1960கள் மற்றும் 1970களில் இடம் பெற்றிருந்தது,அதே நேரத் தில் கிரீன்லாந்தின் சுகாதார அமைப்பு இன்னும் டேனிஷ் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது, மேலும் 2022 வரை இது தொடர்பில் பெரும்பாலும் அறியப்பட வில்லை. அந்த ஆண்டு, டேனிஷ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் பாட்காஸ்ட் ஸ்பை ரல் காம்பாக்னென் (தி ஸ்பைரல் பிரச்சாரம்) 4,500 பெண்கள் மற்றும் சிறுமிகள் வரை ஒப்புதல் இல்லாமல் கருத்தடை சாதனங்கள் உடலில் பொருத்தப்பட்ட பதிவுகளை வெளிக்கொண்டு வந்திருந்தது.
சில பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு அவர்களுக்கு தெரியாமல் சாதனங்கள் பொருத்தப் பட்டன, மற்ற சந்தர்ப்பங்களில் மொழித் தடை அவர்கள் கருத்தடை நடைமுறையைப் புரிந்து கொள்ளவிடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது. தற்போது வெளிவந்துள்ள தகவல்கள் பொது மக்களின் சீற்றத்தைத் அதிகரித்துள்ளன. மேலும் பொறுப்புக்கூறலுக்கான புதிய கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
“இந்த வழக்கு பல கிரீன்லாந்துவாசிகளுக் கும் கிரீன்லாந்தில் உள்ள பல குடும்பங்களுக்கும் கோபத்தையும் துக்கத்தையும் ஏற்படுத்துகிறது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்” என்று ஃபிரடெரிக்சன் புதன்கிழமை(27) தெரி வித்துள்ளார். “நடந்ததை நாம் மாற்ற முடி யாது. ஆனால் நாம் பொறுப்பேற்க முடியும். எனவே, டென்மார்க் சார்பாக, நான் மன்னிக்க விரும்புகிறேன்” என்று கூற விரும்புகிறேன்.
“கிரீன்லாந்துவாசிகள்” என்பதற்காக “முறையான பாகுபாட்டிற்கு ஆளான சிறுமிகள் மற்றும் பெண்கள்” என்று பிரதமர் குறிப்பிட்டார், “அவர்கள் ஏமாற்றப்பட்டதற்காக, அவர்கள் அனுபவித்த உடல் மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு” மன்னிப்பு கோரினார்.
இந்த ஊழல் குறித்து ஒரு சுயாதீன விசாரணை நடந்து வருகிறது, அதன் கண்டு பிடிப்புகள் செப்டம்பர் 2025 இல் வெளி யிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1970கள் மற்றும் 1980களில் உள்ள 143 பெண்கள் குழு கட்டாய கருத்தடை நடை முறைகள் தொடர்பாக டென்மார்க்கின் உள்துறை மற்றும் சுகாதார அமைச்சகத்திற்கு எதிராக 2024 ஆம் ஆண்டில் வழக்குத் தொடர்ந்தது. அவர்கள் மொத்தம் கிட்டத்தட்ட 43 மில்லியன் குரோனர் (தோராயமாக $6.3 மில்லியன்) இழப் பீடு கோருவதாக அவர்களின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
கிரீன்லாந்தில் இருந்து குழந்தைகள் 1950 களில் டென்மார்க்கிற்கு அழைத்துச் செல்லப் பட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டென் மார்க் 2022 இல் பொது மன்னிப்பு கேட்டது.



