ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

191 Views

IMG 4293 ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் வீட்டில் பணிப் பெண்ணாக பணியாற்றி உயிரிழந்த ஹிஷாலினியின் குடும்பத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று  முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண்கள் ஒன்றியம் மற்றும், சிவில் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,

”இலங்கையில் பெண்கள் மற்றும் சிறுவர்களிற்கெதிரான குற்றங்கள் பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அந்த வகையில் கொழும்பில் மரணமடைந்த ஹிஷாலினி என்ற சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்கள் உடனடியாக கண்டு பிடிக்கப்பட்டு, உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

IMG 4297 ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

அவளது மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று தொடர்புடைய அதிகாரிகளை கோரி நிற்கின்றோம். தற்போது சிறுமிகள் பெண்கள் மீதான, துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவது கேள்விக் குறியாகவுள்ளது.

எனவே ஹிஷாலினியின் மரணத்திற்கு காரணமானவர்கள்  சட்டத்தின்  முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

எமது நாட்டின் பெண்கள் சுயகௌரவத்துடன் பாதுகாப்பாக வாழும் சூழ்நிலையை அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்” என்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-140-july-25-2021

Leave a Reply