சபாநாயகர் இருக்கைக்கு அருகில் ஆர்ப்பாட்டம் : பாராளுமன்றம் நாளைவரை ஒத்திவைப்பு!

பாராளுமன்றம் நாளை (22)  காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடத்தக்கோரி ஐக்கிய மக்கள் சக்தி எம்பிக்களும் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து பாராளுமன்றத்தை நாளை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.