மட்டக்களப்பில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதி மக்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமது பூர்வீக எல்லைகளை மாற்றியமைக்கவேண்டாம் எனவும் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சேதனப்பசளை உற்பத்தி நிலையத்தினை இடமாற்ற வலியுறுத்தியும் அரச காணிகளை அபகரிப்பதை தடுத்துநிறுத்துமாறு கோரியும் சட்ட விரோத மண் மாபியாக்களுக்கு அனுமதி வழங்கவேண்டாம் என வலியுறுத்தியும் இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.