அரசுக்கு எதிராக நுவரெலியா கந்தப்பளையில் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்திற்கு எதிராக நுவரெலியா கந்தப்பளை நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தை கந்தப்பளை பிரதேச பொதுமக்களுடன் இணைந்து, சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு, மின் கட்டண அதிகரிப்பு வரிவிதிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.