அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க இ.தொ.கா தீர்மானம்

அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

விரிவான கலந்துரையாடலின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கட்சியின் செயலாளர் ஜீவன் தொண்டமான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த முடிவு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

Tamil News

Leave a Reply