இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள் இலங்கை மீள்வதற்கான செயல் ஊக்கமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்- இந்தியா

128 Views

நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவை வெளிப்படுத்துவதற்காகவே நான் இலங்கைக்கு  பயணம் மேற்கொண்டேன் என இந்திய வெளிவிவகார அமைச்சர்எஸ் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கு மீண்டும் பயணம் மேற்கொள்வது மிகவும் மகிழ்ச்சியளிக்கின்ற விடயம் என்பதை முதலில் தெரிவிக்கவேண்டும்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஏனைய இலங்கை அமைச்சர்களை நேற்று மாலை சந்தித்த பின்னர் நாங்கள் சிறந்த பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டோம்.

இலங்கையின் நெருக்கடியான தருணங்களில் அதற்கான ஆதரவை வெளியிடுவதற்காகவே நான் பிரதானமாக இலங்கைக்கு பயணம் மேற்கொண்டேன்.

இலங்கை தனது பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்காக இந்தியா 4 பில்லியன் அமெரிக்க டொலர் உதவிகளை கடந்த வருடம் வழங்கியுள்ளமை உங்களிற்கு தெரியும்.

எங்களை பொறுத்தவரை இது அயல்நாட்டிற்கு முன்னுரிமை என்ற விடயம் எங்கள் சகா ஒருவர் தன்னை தானே பார்த்துக்கொள்ளும் நிலைக்கு அந்த நாட்டை விட்டு விட நாங்கள் விரும்பவில்லை.

இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள் இலங்கை மீள்வதற்கான செயல் ஊக்கமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என நாங்கள் நினைத்தோம்.

இந்தியா ஏனையவர்களிற்கு காத்திருக்காமல் தனக்கு சரி என தோன்றியதை செய்ய நினைத்தது,இலங்கை முன்னோக்கி நகர்வதற்காக நாங்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கான எங்கள் உத்தரவாதத்தை வழங்கினோம்.

இது இலங்கையின் நிலையை வலுப்படுத்தும் என்பதுடன் அனைத்து கடன் வழங்குநர்களும் சமமாக கருதப்படும் நிலையை ஏற்படுத்தும் என்பதே இந்தியாவின் கருத்து என்றார்.

Leave a Reply