டெல்லி-NCRல் உள்ள அனல்மின் நிலையங்களே அதிக மாசுபாட்டை ஏற்படுத்துவதாக CREA நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெல்லியில் மூன்றாவது நாளாக காற்று மாசு பெரும் சவாலாக இருந்து வருகிறது. டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, காற்றின் தரம் 450-ஐ தாண்டி பதிவாகி ‘கடுமையான பிளஸ்’ பிரிவுக்கு சென்றுள்ளது. இதனை தொடர்ந்து, மாசு அளவைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு கிராப் 4 கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதற்கிடையில்,என்சிஆர் பகுதியில் உள்ள அனல் மின் நிலையங்கள், பயிர்களை எரிப்பதை விட 16 மடங்கு அதிக காற்று மாசுபாட்டை ஏற்படுத்துவதாக CREA நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
CREA ஆய்வின்படி, டெல்லி-NCRஇல் உள்ள அனல்மின் நிலையங்கள் 8.9 மில்லியன் டன்கள் எரிப்பதால் ஏற்படும் 17.8 கிலோ டன் மாசுபாட்டை விட ,16 மடங்கு அதிக மாசுவை உருவாக்குகின்றன. மேலும், ஜூன் 2022 மற்றும் மே 2023க்கு இடையில், NCRஇல் உள்ள நிலக்கரி மூலம் இயங்கும் அனல்மின் நிலையங்கள் 281 கிலோ டன் சல்பர் டை ஆக்சைடை (SO₂) வெளியிட்டதாக ஆய்வு கூறுகிறது.
பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் என்.சி.ஆர் அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் உமிழ்வுகள் மற்றும் பயிர்கள் எரியும் உமிழ்வு ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பீடு SO₂ மாசுபாட்டின் அளவை எடுத்துக்காட்டுகிறது என்று ஆய்வு கண்டறிந்துள்ளது. என்சிஆர்-ல் உள்ள அனல்மின் நிலையங்கள் ஆண்டுதோறும் 281 கிலோ டன் SO₂-ஐ வெளியிடுகின்றன.
இது 8.9 மில்லியன் டன் பயிர்க் காடுகளை எரிப்பதில் இருந்து வெளிப்படும் 17.8 கிலோ டன்களை விட 16 மடங்கு அதிகம். அமைதியான காற்று மற்றும் வெப்பநிலை வீழ்ச்சி ஆகியவை இதை கடினமாக்கி உள்ளது. டெல்லியின் அண்டை பகுதிகளில் எரியும் மரக்கட்டைகளிலிருந்து வரும் தூசி மற்றும் புகையை குளிர்ந்த காற்று பிடித்துக்கொள்கிறது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) தரவுகளின்படி, டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு (AQI) நேற்று காலை 9 மணியளவில் 488ஆக பதிவாகியுள்ளது.



