ஞானசார தேரருக்கு நீதிமன்றம் பிடியாணை

நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காததை தொடர்ந்து பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதத்தில் கருத்து தெரிவித்த வழக்கில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜராகததை தொடர்ந்து  நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.