ஊழல் மிகுந்த அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும்: இலங்கை சட்டதரணிகள் சங்கம்

கொழும்பு – புதுகடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் அரசாங்கத்திற்கு எதிராக இலங்கை சட்டதரணிகள் சங்கத்தினரால் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இவ் ஆர்ப்பாட்ட பேரணியானது கொழும்பு புதுகடை நீதிமன்ற வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டு இலங்கை வங்கி மாத்தை வரை முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் ஊழல் மிகுந்த அரசாங்கமே இது. இந்த அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் இந்த நெருக்கடி நிலைக்கு சர்வதேச சமூகமோ அல்லது இந்த நாட்டை சேர்ந்த புலம்பெயர் மக்களோ எமக்கு உதவி செய்ய வேண்டுமானால் இந்த ஊழல் மிகுந்த அரசாங்கம் பதவி விலக வேண்டும் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply