கொரோனா: புதிய திரிபு XE வேகமாக பரவும்: WHO எச்சரிக்கை

449 Views

புதிய திரிபு XE வேகமாக பரவும்

புதிய திரிபு XE வேகமாக பரவும்

கொரோனா புதிய திரிபான XE முந்தைய திரிபுகளை ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகம் பரவும் வாய்ப்புள்ளதாக  உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா  கடந்த 2 ஆண்டுகளாக பல அலைகளைாக பரவியது. அண்மையில் கொரோனா உருமாறிய ஒமைக்ரான் பரவலால் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டது.

இது கொரோனா பரவல் 3-வது அலையாக தொடங்கியது. கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் குறைந்து வந்தது. இதனை அடுத்து உலகின் பல நாடுகளும் தங்களது கட்டுப்பா டுகளை தளர்த்தின.

நாடுகளுக்கு இடையேயான விமான சேவையும் மீண்டும் தொடங்கின. இந்த நிலையில்,  உலக சுகாதார நிறுவனம் கொரோனா  புதிய திரிபான XE குறித்த எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது முந்தைய திரிபுகளை ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகமாக பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஜனவரி 19-ம் திகதி பிரிட்டனில் முதன்முதலாக இந்த புதிய மாறுபட்ட கொரோனா திரிபு கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் 600க்கும் குறைவான பாதிப்புகள் இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அதேசமயம் வேறு எந்த நாட்டிலும் இந்த புதிய வகை கொரோனா கண்டறியப்படவில்லை.

இப்போது வரை, ஒமைக்ரானின்  BA.2 துணை மாறுபாடு கோவிட்-19 இன் மிகவும் தீவிரமானதாக கருதப்பட்டது.

XE தொடர்பான இந்த புதிய ஆராய்ச்சி உறுதிசெய்யப்பட்டால், அது இன்னும் தீவிரமாக பரவக்கூடிய கோவிட்-19 வகையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள XE எனும் புதிய மாறுபாடு, ஒமைக்ரானின் BA.1 மற்றும் பிஏ.2 ஆகிய இரண்டு மாறுபாடுகளின் பிறழ்ந்த கலப்பாகும்.

Tamil News

Leave a Reply