இலங்கையில்  5 இலட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

511 Views

5 இலட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 551 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 இலட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இது வரையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 79 ஆயிரத்து 685ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில்  இதுவரையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஒமிக்ரோன் தொற்றால்  அடையாளம் காணப்பட்டவர்கள் எதுவித ஆபகத்தையும் இதுவரையில் சந்திக்கவில்லை எனவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சையும் இதுவரையில் தேவைப்படவில்லை என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இது வரையில் நான்கு பேருக்கு ஒமிக்ரோன்  வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply